மெத்தைக்கு பதில் சவப்பெட்டிக்குள் படுக்கும் இளம்பெண்... இவர் கூறும் காரணத்தை கேளுங்க
இளம்பெண் ஒருவர் தனது மன அமைதிக்காக மெத்தைக்கு பதில் சவ பெட்டியில் படுத்து உறங்கும் சுவாரசிய சம்பவத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
சவப்பெட்டியில் தூங்கும் பெண்
லிஸ் என்ற பெண் ஒருவர் தனது படுக்கை அறைக்குள் 6 அடி நீளமான சவப்பெட்டியை மெத்தைக்கு பதிலாக பயன்படுத்தி, அதில் படுத்து உறங்கி வருகின்றார்.
குறித்த சவப்பெட்டிக்குள் படுத்து உறங்குவதைக் குறித்து அப்பெண் கூறுகையில், தினமும் இதில் படுத்து உறங்குவதால் தனது கவலைகள் அனைத்தும் மறந்து விடுகின்றது என்று இதில் படுக்கும் சௌகரியம் மெத்தையில் கிடைக்கவில்லை...
மேலும் இது தனக்கு அமைதியும், ஆறுதான உணர்வையும் அளிப்பதுடன், இந்த பெட்டிக்குள் இருக்கும் போது உலகின் மற்ற பகுதியிலிருந்து விலகி இருப்பது போன்று உணர்வதுடன், பாதுகாப்பான இடமாகவும் உணர்கின்றாராம்.
குறித்த பெண்ணின் இந்த வினோத பழக்கத்தை பார்த்த சிலர் சுவாரசியமாகவும், தனித்துவமாகவும் இருக்கின்றார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
She has a coffin in her bedroom that she sleeps in. pic.twitter.com/6rPN9qrV5t
— SPOOKY QENNY (@AKBrews) October 24, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |