Viral: பெற்ற பிள்ளைக்காக வெறுங்காலுடன் 6 நிமிடத்தில் சாதனை படைத்த தாய்
பெண் ஒருவர் ஊர்க்காவல் படை உடற்தகுதி தேர்வில் வெறும்கால்களில் 1,600 மீட்டர் தூரத்தை 6 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த பெண்
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டம் துல்மி வட்டாரத்தில் உள்ள சோசோ கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா குமாரி.
கணவரை இழந்த இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், மாமனார் மற்றும் மாமியாரையும் கவனித்து வருகிறார்.
குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமைக்கு மத்தியில், ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு கவிதாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இதற்கான உடற்தகுதித் தேர்வில் கவிதா புடவை அணிந்தபடி, வெறுங்காலுடன் 1,600 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டார்.
பெண் போட்டியாளர்கள் 1,600 மீட்டர் ஓட்டத்தை முடிக்க அதிகபட்சமாக 10 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கவிதா காலணி இல்லாமல் வெறும் 6 நிமிடங்களில் 1,600 மீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்தார்.
इन लोगों के बारे में मत सोचो… कोई तुमसे ज्यादा ताकतवर नहीं। इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है। Wearing a saree and running 1,600 meters barefoot, this mother showed incredible courage, determination, and strength. ❤️🔥 #Mother #Inspiration https://t.co/oR3MDH7Ao1
— अभिषेक सोलंकी (@naughty_fact) October 7, 2026
விளையாட்டு காலணிகள் மற்றும் டிராக்சூட் வாங்க பணம் இல்லாததால், கவிதா தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஓட்டப் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
கவிதா புடவை அணிந்து வெறுங்காலுடன் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, உள்ளூர் ஓட்டப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று கவிதாவை பாராட்டினர்.