4வது மாடியில் நின்று பெண் செய்த காரியம்! வாயடைத்துப் போன நெட்டிசன்கள்
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் எந்தவித முன் எச்சரிக்கையும் இல்லாமல், 4வது மாடியின் ஜன்னலை துடைக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
மனிதர்களை பொருத்த வரையில் சுத்தம் என்பது அனைவரும் விரும்பும் ஒரு விடயமாகும். ஆம் எந்தவொரு இடத்திலும் சரி, தானும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் இங்கு ஒரு பெண் செய்த காரியம் காண்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது. ஆம் 4வது மாடியில் வசிக்கும் பெண் வெளிப்புற ஜன்னலை துடைப்பதற்கு எந்தவித முன் எச்சரிக்கையும் இல்லாமல் நுனியில் நின்றபடி சுத்தம் செய்துள்ளார்.
இந்த காட்சியினை எதிர்வீட்டில் இருந்த பெண்மணி ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார். குறித்த சம்பவம் இந்தியாவில் உத்திரபிரேத மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.