50 அடி கிணற்றுக்குள் விழுந்த பெண்: பதைபதைக்க வைத்த திரில் காட்சி
கேரளாவில் 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை வலை வீசி இழுத்து மீட்டுள்ள சம்பவம் வைரலாக பரவி வருகின்றது.
கேரள மாநிலம் வயநாட்டில் 50 ஆடி கிணற்றில் பெண் ஒருவர் விழுந்துள்ளதை அவதானித்த கிராம மக்கள் தீயணைப்பு வீரருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கயிற்றில் வலையைக் கட்டி கிணற்றுக்குள் இறக்கி, அதில் பெண்ணை உட்கார கோரி மேலே இழுந்துள்ளனர்.
குறித்த பெண் அதிக எடையுடன் இருந்ததால், இழுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதியில் கீழே அறுந்து விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவதானித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், தீயணைப்பு படையினர் வெகு ஜாக்கிரதையாக அப்பெண்ணை மேலே கொண்டு வந்துவிட்டனர்.
50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்ததால் அப்பெண்ணால் எழுந்து நிற்க முடியுமா என்று சந்தேகம் தோன்றிய நிலையில், தீயணைப்பு படையினர் உதவியுடன் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தார்.
மேலும் அப்பெண் எவ்வாறு கிணற்றுக்குள் விழுந்தார் என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#WATCH | Kerala: Fire Department officials and locals rescued a woman after she fell into a 50-feet deep well in Wayanad (10.08) pic.twitter.com/5tG6Jq0vx3
— ANI (@ANI) August 10, 2021