சமையலறையில் பெண்ணிற்கு ஏற்பட்ட அசம்பாவிதம்... நூலிழையில் உயிர்தப்பிய பகீர் காட்சி
பெண் ஒருவருக்கு சமையலறையில் ஏற்பட்ட அசம்பாவிதம் காட்சி ஒட்டுமொத்த பெண்களுக்கு விழிப்புணர்வு காட்சியாக அமைந்துள்ளது.
கொரோனா காலங்களில் லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள், கடைகள் எதுவும் திறக்கப்படாததால், வீட்டிலேயே தனக்கு தேவையான தீணிகளை செய்து சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெண் ஒருவர் வீட்டில் முட்டை போண்டா செய்துள்ளார். அவ்வாறு செய்யும் தருணத்தில், திடீரென வெடித்து எண்ணெய் சட்டி கீழே கவிழ்ந்து அவர் மீதும் பட்டுள்ளது. இதில் அப்பெண் நூலிழையில் தப்பியுள்ளார்.
பொதுவாக முட்டை போண்டா போடும் போது, முட்டையை முழுவதுமாக போடாமல், இரண்டாக வெட்டி அதிலேயே போட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் இவ்வாறான அசம்பாவிதம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.