காவல்நிலையத்தில் புகார் கொடுக்க பெண்: புழுவாய் துடித்த கொடுமை! சுதாரித்த பெண் எடுத்த அதிரடி முடிவு
புதுச்சேரியில் கணவர் மீது புகார் கொடுக்க காவல்நிலையத்திற்கு சென்ற இளம்பெண்ணிற்கு, பொலிசார் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார்.
அங்கிருந்து ஏட்டு ஒருவரிடம் நடந்ததைக் கோரியுள்ளார். குறித்த பொலிசார் பெண்ணை அமர வைத்து, கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.
குறித்த பொலிசார் ஒரு கட்டத்தில் தன்னுடன் இருந்து விடுமாறும், அப்பெண்ணை சில தவறான முறையில் தொந்தரவும் செய்ததோடு, தனக்கு வந்து மசாஜ் செய்யுமாறும் கேட்டுள்ளார்.
குறித்த பெண் சுதாரித்துக்கொண்டு உடனே அவரை தள்ளிவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார்.
அதன் பின்பு தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக உயரதிகாரிகளிடம், புகார் கொடுத்த நிலையில், குறித்த பொலிசாரை பணியிடமாற்றம் செய்து ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளனர்.