கோவிலில் பெண்கள் ஏன் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குவது இல்லை தெரியுமா? தெரியாத பல உண்மைகள்
கோவிலுக்கு சென்று தெய்வத்தை வழிபடும் போது ஆண்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் பெண்கள் அவ்வாறு வணங்குவதில்லை... இதற்கான காரணத்தை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சாஷ்டங்கமாக விழுந்து வணங்குதல்
கடவுள், ரிஷிகள், பெரியவர்கள் என இவர்களை இவ்வாறு சாஷ்டாங்கமாக ஆண்கள் வணங்குவார்கள்.
சாஷ்டாங்கம் என்பதற்கு பொருள் ச என்றால் எட்டு என்பதும், அங்கம் என்றால் உடல் உறுப்பு ஆகும். அதாவது எட்டு உடல் உறுப்புகள் தரையைத் தொட்டு வணங்குவதே ஆகும்.
இரண்டு கால்விரல்கள், இரண்டு முழங்கால்கள், இரண்டு உள்ளங்கைகள், மார்பு, நெற்றி என்ற உறுப்புகள்.
இவ்வாறு வணங்குவதால் உடல் மற்றும் மனம் இவை ஆரோக்கியமாக இருப்பதுடன், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அகந்தையும் நீங்குகின்றதாம்.
பெண்கள் ஏன் வணங்குவதில்லை?
பொதுவாக சாஸ்திர ரீதியாக பெண்களின் மார்பு, வயிறு, இடுப்பு இவை தரையை தொடக்கூடாது என்று கூறப்படுகின்றது.
பெண்கள் தனது வயிற்றில் குழந்தையை 9 மாதங்கள் சுமப்பதாலும், பின்பு அதனை தாய்ப்பால் கொடுத்து வளர்ப்பதாலும் இவ்வாறு கூறப்படுகின்றது.
ஆன்மீக வாயிலாக மட்டுமின்றி அறியல்பூர்வமாகவும் பெண்கள் குழந்தையை சுமக்கும் போது இவ்வாறு வணங்க முடியாது என்பதால், பஞ்சங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமாம்.