Viral News: தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்! வீட்டில் விசேஷம்
இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு பரபரப்பை கிளப்பிய கஷமா பிந்து முதலாம் ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
குஜராத்தின் வதோதராவை சேர்ந்த பெண் கஷமா பிந்து(வயது 24), கடந்தாண்டு ஜூன் 11 ம் தேதி தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.
அவர் கூறுகையில், எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை, ஆனால் என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
எனவே என்னையே நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன், குடும்பத்தினரும் என்னுடைய முடிவுக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.
திருமணத்தன்று தனக்கு தானே குங்குமம் வைத்துக் கொண்டு முறைப்படி சடங்குகளுடன் திருமணமும் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடியுள்ளார் கஷமா பிந்து.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
”உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்” , திருமண நாள் வாழ்த்துக்கள் என்றெல்லாம் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.