அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? சிறந்த தீர்வு இதோ
முதுகுவலி ஏற்படுவதற்கான காரணத்தையும், அதற்கான தீர்வையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதுகுவலி
இன்றைய காலத்தில் பெரியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினர் முதுகு மற்றும் கழுத்து வலியினால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கம் ஆகும். உடம்பிற்கு கெடுதல் ஏற்படும் உணவுகளையே இன்றைய தலைமுறையினர் விரும்பி சாப்பிடுகின்றனர்.
முதுகு தசைகள் இறுக்கமாகி பிடிப்பது, எலும்புகளுக்கு இடையில் இருக்கும் வட்டுகள் வீக்கம் அடைந்து நரம்புகளை அழுத்துவதால் வலி ஏற்படுகின்றது.
கூடுதலாக, கீல் வாதம், எலும்பு சோர்வான ஆஸ்டியோபோரோசிஸ், அன்கிலோசிங் ஸ்பான்டை விடிஸ் போன்ற எலும்பு தொடர்புடைய நோய்களும் முதுகுவலி ஏற்படுத்தும்.
சில சமயங்களில் குடல் அல்லது சிறுநீரக பிரச்சனைகளும் முதுகுவலிக்கு காரணமாக இருக்கும். விபத்துகள் அல்லது காயங்களின் காரணமாகவும் இந்த வலி உண்டாகும்.
முதுகுவலிக்கான காரணத்தை மருத்துவ பரிசோதனைகளான எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன் போன்ற ஆய்வுகள் கண்டுபிடிக்க உதவுகின்றது.
தடுப்பதற்கான வழி என்ன?
தினமும் நடைபயிற்சி, சைக்கிள் சவாரி, நீச்சல் போன்ற எளிய உடற்பயிற்சிகள் முதுகின் தசைகளை வலுப்படுத்தி, நெகிழ்ச்சியை அதிகரிக்கும்.
அதிக எடையால் முதுகுத் தசைகள் மேலே சுமையோடும், வலியை ஏற்படுத்தும், அதனால் ஆரோக்கியமான எடையை வைத்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் மேம்படுகின்றது. மேலும் தசைகளின் இறுக்கம், சோர்வு, வலி குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |