திருமணமான மகளுக்கு இந்த பொருட்களை கொடுக்காதீங்க... அது அசுபமாம்
திருமணமாகி செல்லும் பெண்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தின்படி கொடுத்து அனுப்பக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர் கொடுத்துவிடுவது வழக்கம். ஆனால் சீர் கொடுக்கும் போது கூட சில வாஸ்து காரியங்களை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது சில பொருட்கள் உங்களது திருமணமான மகளுக்கு கொடுப்பது உறவுகளில் விரிசல் நிதி பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி, திருமணமான உங்களது மகளுக்கு கொடுக்கக்கூடாத பரிசுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
எந்த பொருட்களை கொடுக்கக்கூடாது?
எதிர்மறை சக்தியை ஈர்க்கும் கருப்பு நிறத்தில் எந்த பொருளையும் கொடுக்கக்கூடாது. கருப்பு நிற உடையை பரிசாக கொடுத்தால், திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படுவதுடன், கணவன் மனைவி உறவிலும் சிக்கல் ஏற்படும். கருப்பு நிற உடையைத் தவிர்த்து, வெளிர் மற்றும் மங்கலான நேரத்தில் இருக்கும் ஆடைகளை பரிசாக கொடுக்கலாம்.
கண்ணாடி பொருட்களை பரிசாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வாழ்க்கையில் நிதி பிரச்சனைகள் ஏற்படுவதுடன், பலவீனம் மற்றும் உறுதியற்ற தன்மையின் அடையாளமாக கருதப்படுகின்றது. மேலும் கண்ணாடி பொருள் விரைவில் உடைந்துவிடுவதுடன், உறவுகளில் விரிசல்கள் ஏற்படுமாம்.
ஊறுகாயை மகளுக்கு பரிசாக கொடுக்கக்கூடாது. ஊறுகாய் காரமாகவும், புளிப்பாகவும் இருப்பதால், அவர்களின் உறவில் புளிப்பின் அடையாளமாக கருதப்படுகின்றது. மாமியார் மருமகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுடன், வாழ்க்கையில் பதட்டமும் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |