வயதானாலும் உழைப்பை நிறுத்தாத ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?
பொதுவாக ஒவ்வொரு மனிதனும் உடல் தோற்றம், நிறம், உயரம், பருமன் என பல்வேறு விடயங்களிலும் வேறுபாடுகளை கொண்டுள்ளதுடன் சில தனித்துவமான விசேட குணங்களையும் கொண்டுள்ளனர்.
ஜோதிட சாஸ்திரதின் பிரகாரம் ஒருவருடைய ராசிக்கும் இவர்களின் தனித்துவ ஆளுமைகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
இந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
வாழ்வில் இறுதி வரையில் மற்றவர்களுக்கு பாரமாக இருந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கடின உழைப்பாளியாகவும் உறுதியானவராகவும், அதிகம் பிடிவாத குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
மற்றவர்கள் விரக்தியடைந்து விட்டுவிடும் விடயங்களையும் கூட இவர்கள் சாதிக்க ஆழமாகச் சென்று கடினமாக உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் ஆதரவில் வாழ்கை நடத்துவதை விரும்ப மாட்டார்கள்.
இவர்களுக்கு நிதி முகாமைத்துவ ஆற்றல் பிறப்பிலேயே அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில் இவர்களின் உழைக்கும் ஆற்றல் குறையும் முன்னரே இவர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதித்துவிடுவார்கள்.
கடகம்
ஒரு கடக ராசியில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசியினர் சிறந்த தலைமைத்துவ குணம் கொண்டவர்களாகவும், இலக்குகளை அடைவதற்காக அயராது உழைக்கும் உன்னத பண்பை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் யாரிடமும் உதவி கேட்டு நிற்பதை விரும்பாத காரணத்தால், வாழ்வின் இறுதிகாலம் வரையில் தங்களின் உழைப்பை நிறுத்த மாட்டார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எதையும் முழுமையாக செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பதனால், கடினமாக உழைக்கும் ராசிக்காரர்களில் ஒருவராக இருப்பது நிச்சயம் நியாயமானது.
மற்றவர்கள் குறுக்குவழிகளையும் விரைவான வெற்றிகளையும் துரத்தும்போது, இடவர்கள் நேர்மையான தங்களின் உழைப்புக்கு முன்னுரிமை கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் இறுதி வரையில் தங்களின் சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |