ஏஐ நபரை உருவாக்கி தானே திருமணம் செய்து கொண்ட பெண் - வைரலாகும் காணொளி
ஏஐ மீது கொண்ட காதலால் ஜப்பானைச் சேர்ந்த கனோ என்ற பெண் தான் உருவாக்கிய ஏஐ நபரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
வைரல் வீடியோ
ஜப்பானில் 32 வயதான பெண் ஒருவர், தனது சொந்த ஏஐ படைப்பான சேட்ஜிபிடி அடிப்படையிலான ‘லூன் கிளாஸ்’ என்ற செயற்கை நுண்ணறிவு துணையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றது.
இந்த விசித்திர திருமணம் ஒகயாமா நகரில் நடைபெற்றது. இந்த திருமணம் முறைப்படி நடந்துள்ளதாயினும் சட்டரீதியாக செல்லுபடி ஆகாது என்பது குறிப்பிட தக்கது.

காதல் உருவானது எப்படி?
கனோ, தனது நிச்சயதார்த்தம் முடிந்து நின்றுபோன திருமணத்திற்கு பின்னர், மூன்று வருடங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் அந்த பெண் சேட்ஜிபிடி-ஐ பயன்படுத்தத் தொடங்கினார்.
அவர்களின் தினசரி உரையாடல்கள் அதிகரித்து, ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட மெசேஜ்களை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு முன்னேறி வந்துள்ளது.
திருமண வீடியோ காண இங்கே கிளிக் செய்யவும்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |