குடிசை வீட்டிற்கு ரூ2.47 லட்சம் கரென்ட் பில்! ஏழை பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்
குடிசையில் வாழ்ந்த பெண்ணிற்கு ரூ2.47 லட்சம் கரென்ட் பில் வந்துள்ளத சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ராம்பாய் பிரஜாபதி65 வயதாகும்இவர் ஒரு குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி அதில் கிடைக்கும் பணம் மூலம் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு சமீபத்தில் வந்த மின்சார கட்டணம் இவரை ஷாக் ஆக்கியுள்ளது. இவருக்கு ரூ2.47 லட்சம் கரெண்ட் பில் வந்துள்ளது.
இது குறித்து அந்த பெண் குறும்போது : "நான் குடிசையில் தான் வசிக்கிறேன். என் வீட்டில் ஒரு பல்ப் மற்றும் ஒரு டேபிள் பேன் மட்டுமே இருக்கிறது.
எனக்கு மாந்தோறும் ரூ300 முதல் ரூ500 வரை எலெக்ட்ரிக் பில் வரும் கடந்த ஒரு மாதமாக கொரோனா காரணமாக வேலையில்லாததால் பணமில்லை அதனால் பில் கட்டவில்லை.
இந்நிலையில் இந்த மாதம் கரெட்பில் ரூ2.47 லட்சம் வந்துள்ளது. இது குறித்து நான் மின்சாரத்துறை அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால் அவர் யாருக்கும் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.
இநத விடயம் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.