கணவர் இறந்துவிட்டதாக கூறி மருத்துவருடன் மனைவி செய்த மோசமான காரியம்
கணவர் இறந்துவிட்டதாக கூறி பெண் ஒருவர் மருத்துவர் ஒருவருடன் சேர்ந்து இன்சூரன்ஸ் பணத்தினை பெற்றுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.
அகமதாபாத்தில் கத்வாடாவில் வசிக்கும் நந்தா மராத்தி என்ற பெண் நிமேஷ் என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் அவர்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இந்நிலையில் அந்த பெண் கணவருக்கு வேலையில்லாததால் அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
துரத்திவிடப்பட்ட கணவரும் சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டதால், மருத்துவர் ஒருவருடன் சேர்ந்து கணவர் இறந்துவிட்டதாக போலி சான்றிதழை வாங்கியுள்ளார்.
பின்பு அந்த சான்றிதழை வைத்து கணவர் பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணம் 18 லட்சத்தினை எடுத்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட கணவர் நிமேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் குறித்த பெண்ணையும் அவரது கூட்டாளியான ஹரிகிருஷ்ணா சோனி என்பவரையும் கைது செய்துள்ளனர்.