மதுபோதையில் ஒரு குடும்பத்தையே அழித்த பெண் - 9 வருட சிறைதண்டனைக்கு பின் நூதன விடுதலை!
மதுபோதையில் கார் ஓட்டிய பெண்ணுக்கு 9 வருடம் சிறை தண்டனைக்கு பின் தற்போது statutory release-ல் விடுதலை செய்துள்ளது.
பொதுவாக சிறை தண்டனை என்றாலே செய்த குற்றத்துக்கு கிடைக்கும் தண்டனை தான். செய்த குற்றத்துக்கான தண்டனையை சிறையிலேயே கழித்துவிட்டு தான் வெளியெ வர முடியும்.
ஆனால், இங்கு வாழ்நாள் முழுவதும் செய்த தவறை திரும்ப செய்ய கூடாது என்பது நினைவில் இருக்கும் விதமாக ஒரு நூதன விடுதலை கனேடிய பெண்ணுக்கு கிடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவில் மதுபோதையில் கார் ஓட்டிய அந்த பெண் விபத்தை ஏற்படுத்த 4 பேர் கொண்ட குடும்பமே மரணமடைந்துள்ளது. இதனால், அந்த பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த பின், அவர் statutory releaseல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த statutory release என்பது குற்றவாளியின் தண்டனை காலம் முடிந்து வெளியே வருவதுதான் என்றாலும், இது வழக்கமான விடுதலை போல் அல்ல.
இந்த சட்டத்தின் கீழ் வெளிவிடப்படும் குற்றவாளிகள் சமூகத்தில் தாங்கள் வாழப்போகும் மீதமிருக்கும் வாழ்நாளில் வாழ்ந்துகொண்டே, தங்கள் தவறுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
அதன்படி 3-ல் 2 பங்கு சிறைதண்டனை அனுபவித்தவர்களுக்கு வழங்கப்படும் இந்த statutory release தான் Catherine McKay என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். அத்துடன் இவர் இனி மது, போதை மருந்துகளை எடுத்து கொள்ளவும், வாகனம் ஓட்டவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.