வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்த குள்ள நரி... வில்லத்தனமாக சோறுபோட்டு விரட்டிய தம்பதி!
லண்டனில் வீடு ஒன்றில் நரி ஒன்று திடீரென புகுந்துள்ளது. இதனைப் பார்த்த தம்பதி அதனை விரட்டியுள்ளனர்.
வெளியில் ஓடாமல் வீட்டிற்குள் சென்ற நரி, வாஷிங் மெஷினுக்குள் சென்று ஒளிந்துகொண்டது.
தம்பதியும் நீண்ட நேரமாக தேடியுள்ளனர். கடைசியாக வாஷிங்மெஷின் கதவை திறந்துபார்த்தபோது நரி, அதனுள் இருந்துள்ளது. பயத்தில் அலறியவாறு, கூச்சலிட்டு நரியை வெளியே அனுப்ப முயற்சி செய்துள்ளனர்.
எதற்கும் பிடிகொடுக்காத நரி, வாஷிங்மெஷினுக்குள்ளேயே இருந்துள்ளது.
Honestly, guys. I’ve got a fox stuck in my washing machine. WHAT THE ACTUAL FOX pic.twitter.com/dyVBTiTEXn
— Natasha Prayag (@NatashaTP) May 25, 2021
எப்படி வெளியேற்றுவது என அவர்கள் யோசித்தபோது, உணவு தேடி வீட்டிற்கு வந்திருக்கலாம் என அவர்கள் எண்ணியுள்ளனர். அதன்படி, நரிக்கு உணவு மற்றும் தின்பண்டங்களை கொடுத்துள்ளனர்.
அவர்கள் நினைத்தது சரியாக இருந்துள்ளது. உணவைப் பார்த்த நரி, வாஷிங்மெஷினுக்குள் இருந்து வெளியே வந்து அவற்றை சாப்பிட்டுவிட்டு இயல்பாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளது.
தங்களுக்கு நேர்ந்த இந்த வித்தியாசமான அனுபவத்தை, தம்பதியில் ஒருவரான நட்டாஷா பிரயாக் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பதிவு இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.