கார் ஓட்டிக் கொண்டே பெண் பார்த்த வேலை... வைரலாகும் காட்சி
பெண் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் சாலைகளில் போக்குவாரத்து நெரிசல் என்பது அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. ஏனெனில் மக்கள் விரைவாக செல்ல வேண்டும் என்று வீட்டில் தனித்தனியாக வாகனங்களை வாங்கிக் கொள்கின்றனர்.
அதிலும் இந்திய நகரங்களிலேயே பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் எப்படியிருக்கும் என்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரிந்திருக்கும்.
ஒரு இடத்திற்கு செல்லும் நேரம் ட்ராபிக் காரணமாக நேரம் அதிகமாவதால், காரில் அமர்ந்தவாறு பூ கட்டுவது, காய்கறி நறுக்குவது என்ற சில செயல்கள் நடக்கும். அப்படியே தற்போது பெண் ஒருவர் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு காரையும், லேப்டாப் என இரண்டையும் இயக்கியுள்ளார்.
வைரலாகி வரும் அந்த வீடியோவில் கார் ஓட்டிச் செல்லும் பெண்ணின் முன்பு, லேப்டாப் திறந்து வைக்கப்பட்டு அதில் டேப்களும் ஓபன் செயப்பட்டிருக்கிறது. அவருக்கு முன்னால் சில கார்களும் செல்கின்றன. இதை அருகில் இருக்கும் வண்டியில் செல்லும் ஒருவர் படம் பிடித்திருக்கிறார்.
இக்காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், பெங்களூர் துணை போலிஸ் கமிஷ்னரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பெண்ணை அழைத்து, அபராதம் விதித்துள்ள நிலையில் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டிலிருந்து வேலையை பாருங்கள், காரில் இருந்து அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
"work from home not from car while driving" pic.twitter.com/QhTDoaw83R
— DCP Traffic North, Bengaluru (@DCPTrNorthBCP) February 12, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |