3 வருடமாக வீட்டைவிட்டு வெளியேறாத பெண்! பக்கத்தில் வாடகைக்கு குடியேறிய கணவர்: அதிர வைத்த உண்மை சம்பவம்
கொரோனா ஆரம்பமான வருடத்திலிருந்து தற்போது வரை இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறாத இருந்த பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா
கடந்த 2020ம் ஆண்டு இந்திய உட்பட அனைத்து உலக நாடுகளையும் பாதித்த கொரோனாவின் தாக்கம் தற்போது வரை நீடித்து வருகின்றது.
இரண்டு ஆண்டுகளாக மக்கள் வெளியே வராமல் இதன் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து நாடுகளும் இயல்நிலைக்கு திரும்பியுள்ளது.
அப்படி இருக்கையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தற்போது செய்துள்ள செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகளாக வீட்டைவிட்டு வெளியேறாத பெண்
ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் மாஜி, முன்முன் மாஜி தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், கொரோனா காலத்தில் தனி மனித இடைவெளி உட்பட பல கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்த நிலையில், முன்முன் இதனை தற்போதும் கடைபிடித்து வருகின்றாராம்.
கொரோனா பரவல் முடிந்து இயல்புநிலை திரும்பி இருந்தாலும் முன்முன் மாஜி வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகின்றது.
கணவரின் பேச்சை கேட்காத மனைவி
முன்முன்னிடம் கணவர் பலமுறை எடுத்துக் கோரியும் கேட்காததால் நாட்கள் செல்ல செல்ல சரியாகிவிடும் என்று நினைத்தவருக்கு எந்தவொரு நல்ல செய்தியும் இல்லை.
ஆம் கணவரைக் கூட வீட்டிற்குள் சேர்க்காமல் வீட்டை பூட்டிக்கொண்டு தனது மகனுடன் முன்முன் வாழ்ந்து வந்ததால், கணவர் அருகில் வேறு வழியில்லாமல் வாடகை வீட்டில் தங்கி வருகின்றார். ஆனால் தனது மனைவி மகனுக்கு தேவையான பொருட்களை வாங்கி அவர்கள் கதவருகே வைத்துவிட்டு செல்வதுடன், இவர்கள் இருவரிடம் வீடியோ கால் மூலம் பேசியும் வந்துள்ளார்.
காவல்நிலையம் சென்ற கணவர்
ஒரு கட்டத்தில் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாத கணவர் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ள நிலையில், பொலிசார் மற்றும் குழந்தைகள் நலத்துறை உறுப்பினர்கள் முன்முன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
கதவை எவ்வளவே தட்டியும் முன்முன் திறக்காமல் இருக்கவே, வேறு வழியில்லாமல் கதவை உடைத்து அவரையும், அவரது குழந்தையையும் வெளியே கொண்டு வந்துள்ளனர்.
தற்போது முன்முன்கு கவுன்சிலிங் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகின்றது.
கொரோனா தொற்றின் பெயரில் மூன்று ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் பெண் குறித்த விஷயம், அப்பகுதி மக்களை திடுக்கிட வைத்திருந்தது.