இவரோடு தொல்லையா இருக்கு... ரஜினி வீட்டு முன் கடுப்பில் கத்திய வயோதிப பெண்
ரஜினி வீட்டு முன்பு பாட்டி ஒருவர் கடுப்பில் கத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் அடுத்த வாரம் லால் சலாம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனால் இது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பிரபலங்களும் குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
கடுப்பில் கத்திய பாட்டி
இப்படியொரு நிலையில் ரஜினிகாந்திற்கு பொங்கல் வாழ்த்து கூறுவதற்காக ரசிகர்கள் அவரின் வீட்டின் முன்பு கூடியுள்ளனர். இதனால் பக்கத்தில் வீட்டிலிருந்த பாட்டியொருவர் கடுப்பாகியுள்ளார்.
கோபத்துடன் ரஜினியின் வீட்டு முன் வந்து, “நாங்களும் தான் டேக்ஸ் கட்டுறோம்... இதே ஏரியாவில் காலங்காலமாக குடியிருக்கோம்... எங்களுக்கெல்லாம் எந்த ஸ்பெஷலும் கிடையாது. இங்களுக்கு மட்டும் என்ன இருக்கு...
ஒவ்வொரு முறையும் இப்படி ரசிகர்கள் இங்க வருவது எங்களுக்கு தொல்லையா இருக்கு... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா..” என கூறியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், ரஜினி ரசிகர்கள் காணொளியை பார்த்த பின்னர் விமர்சனங்களை கருத்துக்களாக கொட்டி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |