சிங்கத்தை தோல் மேல் தூக்கி சென்ற இளம்பெண்- பார்வையாளர்களை வாயடைக்க வைத்த வைரல் வீடியோ
தெருவில் சுற்றித் திரிந்த சிங்கத்தை பெண் ஒருவர் அலேக்காக தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
உலகில் பலவிதமான வினோத விஷயங்கள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற சம்பவம் தான் வைரலாக பேசப்படுகிறது.
அங்கு, சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் காணப்படுகிறது. அந்தவகையில், குவைத்தில் உள்ள சாபியா பகுதியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கக்குட்டி, அங்கிருந்து வெளியே தப்பிச் சென்றுள்ளது.
இது குறித்து அதன் உரிமையாளர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருந்தனர். இதனைக்கண்ட அந்த சிங்கக்குட்டியை வளர்த்த பெண், அந்த சிங்கம் இரவில் சாலையில் சுற்றித்திரிவதை கண்டு அதனை குழந்தையை தூக்குவது போல தூக்கிச் சென்றார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.