பெண்கள் காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்? ஆன்மீக உண்மை இதுதான்
பெண்கள் காலில் கட்டும கருப்பு கயிறுக்கு பின்னே இருக்கும் பயன்கள் மற்றும் ஆன்மீக காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் இதனை புதிய ட்ரெண்டாக்கியும் வருகின்றனர்.
அதிலும் கருப்பு கயிரில், ஏதாவது சிறிய லாக்கெட்டுகளை சேர்த்து அணிந்து அதனை ஸ்டைலான அணிகலனாக மாற்றியுள்ளனர். ஆனால் காலில் கருப்பு கயிறு அணிவது முன்னோர்களால் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய நடைமுறையாகும்.
பெண்கள் கருப்பு கயிறு கட்டுவது திருஷ்டியை தவிர்க்கும் என்று கூறப்படுகின்றது. ஆதலால் ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கருப்பு கயிறை கட்டுகின்றனர். இதற்கான ஆன்மீக காரணத்தையும் தெரிந்து கொள்வோம்.

கருப்பு கயிறு கட்டுவது ஏன்?
காலில் கருப்பு நிற கயிறு கட்டுவதால் சனி தோஷம் நீங்குவதுடன், ராகு கேது பாதிப்பு வராது என்று கூறப்படுகின்றது. கண்திருஷ்டியை தவிர்ப்பதற்கும் கருப்பு நிற கயிற்றை காலில் கட்டுகின்றனர்.
ஜோதிடத்தின்படி ஒரு நபரின் பார்வைக்கு சக்தி அதிகமாகமாம். ஆதலால் மற்றவர்களின் கண்படாமல் இருப்பதற்கு குழந்தைகளுக்கு கருப்பு மை வைப்பது வழக்கமான நிலையில், காலில் கறுப்பு கயிறு கட்டுவது வழக்கமாக இருக்கின்றது.
மேலும் நேர்மறை சக்தியை அதிகரிப்பதுடன், சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்களை உடலுக்கு உறிஞ்சும் தன்மை இதற்கு உள்ளதாகவும் கூறப்படுகுின்றது.

கணுக்கால் பகுதியில் கருப்பு கயிறு கட்டினால் நாடியின் இயக்கமும், மனச்செயல்பாடுகளும் சீராகும் என்பது நம்பிக்கையாகும்.
ஜோதிடத்தின் படி காலில் கருப்பு கயிறு கட்டுவது நிதி நிலையை பலப்படுத்தும் என்றும், சனி பகவானை வணங்கி ஒன்பது முடிச்சு போட்டு கருப்பு கயிறை அணிவது பண வரவு அதிகரிப்பதுடன், ஆபத்து வராமல் பாதுகாப்பதாகவும் நம்பிக்கை காணப்படுகின்றது.
பெண்கள் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணி, சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் கயிறு கட்டுவது சிறப்பாக கருதப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |