வசதியான ஆண்களை மயக்கி இளம் பெண் போலீசின் மோசமான செயல்! உண்மைகள் அம்பலமானது
இந்தியாவில் வசதியான ஆண்களை மயக்கி திருமணம் செய்து ஏமாற்றி வந்த போலீஸ் அதிகாரி சந்தியா ராணியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானாவின் ஐதராபாத் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சந்தியா ராணி.
முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2வது திருமணம் செய்து கொண்டார், 2வது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட, சரண்தேஜ் என்பவருடன் பழகி வந்துள்ளார், சந்தியாவுக்கு ஏற்கனவே பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில் சந்தியா ராணியுடன் சில மாதங்கள் பழகியதில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பதும், பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும் சரண் தேஜிக்கு தெரியவந்தது.
இதனால், அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். ஆனால் சந்தியா ராணி திருமணம் செய்ய மறுத்ததால் இருவரும் சேர்ந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து சரண்தேஜை துன்புறுத்தி வந்ததுடன் மதம் மாற வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார், அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால் சரண் தேஜ், சந்தியா ராணியின் பிடியிலிருந்து தப்பிக்க முடிவெடுத்தார், இதையடுத்து ஐதராபாத் காவல் துறை ஆணையருக்கும், செம்ஷாபாத் காவல் நிலைய வாட்ஸ் அப் எண்ணிற்கும் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியா ராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சந்தியா ராணி வசதியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து ஏமாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.