கண்காட்சியில் வைக்கப்பட்ட பொக்கிஷத்தை சுக்குநூறாக உடைத்த பெண்! எவ்வளவு விலை தெரியுமா?
அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷம் ஒன்றினை பெண் ஒருவர் தெரியாமல் உடைத்துள்ள நிலையில், இதன் விலை கேட்பவர்களை தலைசுற்ற வைக்கின்றது.
கண்காட்சியில் Balloon Dog
உலகம் முழுவதும் கலைப்பொருட்களின் கண்காட்சி இருப்பதை நாம் அவதானித்திருப்போம். அந்த வகையில் Jeff Koons எனும் கலைஞரின் படைப்புகள் உலக பிரசித்தமானவை.
குறிப்பாக இவர் உருவாக்கிய ‘balloon dog’ சீரியஸ் கலை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த ‘balloon dog’ காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள Art Wynwood-ல் இந்த கண்காட்சி நடைபெற்றிருந்த நிலையில், இதில் ஏராளமானோர் கலந்து கொண்டதுடன், இளம்பெண் ஒருவர் அதனை தட்டிப் பார்க்க முயற்சித்ததில் அந்த பலூன் டாக் சுக்குநூறாக உடைந்துள்ளது.
இவை எதிர்பாராமல் நடந்திருந்தாலும், ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதன் சந்தை விலை 42 ஆயிரம் டொலர் எனவும், இந்திய மதிப்பு 35 லட்சம் என்றும் கூறப்படுகின்றது.
இதுபற்றி சக கலைஞரான ஒருவர் பேசுகையில், "அந்தப் பெண் கலைப் படைப்பைத் தட்டி அது உண்மையான பலூனா என்று பார்க்க நினைத்திருக்கிறார். அந்த பெண் அங்கு இருப்பதை நான் பார்த்தேன். அவர் balloon dog-ஐ தட்டிக் கொண்டிருந்தார். அப்போது அது கீழே விழுந்து ஆயிரக்கணக்கான துண்டுகளாக உடைந்தது" எனத் தெரிவித்திருக்கிறார்.
Jeff Koons-ன் சிறந்த கலைப் படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் balloon dog-ற்கு நிதியுதவி செய்த கலைஞர் ஒருவர், அப்பெண் தெரியாமலே இதனை செய்தார். அப்பெண் வேண்டுமென்றே கலைப் பகுதியை உடைக்காததால், காப்பீடு மூலம் சேதத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.