தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பது ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஒவ்வொரு நபரும் தண்ணீரை சரியான அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும், அதே வேளை தாகம் இல்லாமல் தண்ணீர் பருகலாமா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தாகம் இல்லாமல் தண்ணீர் பருகலாமா?
தண்ணீர் என்பது மனிதன் உயிர்வாழ முக்கியமான தேவையாக இருக்கின்றது. உடம்பில் நீரிழிப்பினை தடுக்க வேண்டும் என்றால் போதுமான தண்ணீர் குடிப்பது அவசியமாகின்றது.
நீரிழிப்பானது கடுமையான வெப்பம் அதிக வியர்வை, கொப்புளங்கள் மற்றும் சோர்வு ஆகியற்றிற்கு வழிவகுக்கின்றது. தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தண்ணீரை எடுத்துக் கொண்டால் மட்டுமே நீரிழிப்பை தடுக்க முடியும். ஆனால் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகினால் சில தருணங்களில் உடம்பிற்கு தீங்கு ஏற்படும். ஆதலால் தாகம் எடுக்கும் பொழுது மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்.
நீர்ச்சத்து உடம்பில் ஏற்பட்டால், சிறுநீரக கற்கள் உருவாவதுடன், பல உடல்நிலை பிரச்சினையும் ஏற்படும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.
அன்றாட வேலையை ஆற்றலுடன் செய்ய வேண்டும் என்றால் தேவையான அளவு தண்ணீரை கட்டாயம் பருக வேண்டும்.
தண்ணீர் குடிப்பது மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும், நீங்கள் அமைதியாகவும் திருப்தியாகவும் உணரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |