பருப்பு இல்லாமல் ரோட்டு கடை இட்லி சாம்பார் செய்யனுமா? இந்த பதிவு உங்களுக்குத்தான்
பருப்பு இல்லாமல் ரோட்டு கடை ஸ்டைலில் இட்லி சாம்பார் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை உணவாக பெரும்பாலான தமிழ் மக்களின் தெரிவாக இருப்பது இட்லி மற்றும் தோசை தான். இதற்கு தேங்காய், தக்காளி, வேர்க்கடலை போன்ற சட்னி மற்றும் சாம்பார் இவற்றினை வைத்து சாப்பிடுவார்கள்.
சாம்பார் என்றால் நிச்சயம் அதில் பருப்பு போட்டு வைப்பது தான் வழக்கம். ஆனால் பருப்பு இல்லாமல் ரோட்டு கடைகளில் வைக்கும் சாம்பார் எவ்வாறு வைக்கலாம் என்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தற்போது பருப்பு சேர்க்காத சாம்பார் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு - 10 பல்
சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
வரமிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
கருவேப்பில்லை - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சிறிதளவு விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின்பு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் சாம்பார் பொடியையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
பின்பு பொட்டுக்கடலையையும் இதனுடன் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். சற்று ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பூண்டையும் தட்டிப்போடு கிளறிய பின்பு, வரமிளகாய், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து அதனுடன் மசாலாவை சேர்த்து கிளறிவிடவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் ரோட்டுக்கடை சாம்பார் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |