Garlic Chutney: இட்லி, தோசைக்கு சுவையான பூண்டு சட்னி! எப்படி தயாரிக்கனும்?
இட்லி, தோசைக்கு புதுவிதமான ஸ்டைலில் பூண்டு சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக காலை உணவாக பெரும்பாலான தமிழ் மக்களின் தெரிவாக இருப்பது இட்லி மற்றும் தோசை தான். இதற்கு தேங்காய், தக்காளி, வேர்க்கடலை போன்ற சட்னி மற்றும் சாம்பார் இவற்றினை வைத்து சாப்பிடுவார்கள்.
தற்போது ஒரு மாற்றத்திற்கு பூண்டு சட்னியை செய்து பார்க்கலாமே? இதனை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
வரமிளகாய் - 10
புளி - 1 (எலுமிச்சை அளவு)
பூண்டு - 1/4 கிலோ
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி புளியை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் வரமிளகாய் மற்றும் உளுத்தம் பரு்ப்பை போட்டு பென்னிறமாக வதக்கி, தொடர்ந்து பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் 1/4 ஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த சட்னியை தாளிப்பதற்கு கடாய் ஒன்றில் சிறிது எண்ணெய், தாளிப்பிற்கு தேவையான கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை இவற்றினை தாளித்த பின்பு, அரைத்து வைத்த சட்னியை இதனுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளிறி விடவும்.
தண்ணீர் சிறிது வற்றியதும் இறக்கிவிட்டு, பின்பு இட்லி தோசைக்கு பறிமாறவும்.. அட்டகாசமான சுவையில் பூண்டு சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |