தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி செய்யலாம்... எப்படித் தெரியுமா?
பொதுவாகவே வீடுகளில் எந்த உணவு சமைத்தாலும் கண்டிப்பாக சட்னிக்கு ஒரு இடம் உண்டு. அப்படி சட்னி செய்ய விரும்புபவர்கள் தினம் தினம் வித விதமான சட்னியை செய்து சுவைப்பார்கள்.
அந்தவகையில் தேங்காய் சட்னியை விருப்புபவர்கள் அதிக பேர் இருக்கிறார்கள். அப்படி வீடுகளில் தேங்காய் இல்லாத நேரத்தில் தேங்காய் சட்னி செய்ய தடுமாறுவார்கள். அப்படி யோசிப்பவர்களுக்கு ஏற்ற ஒரு ரெசிபி தான் இது.
ஏனென்றால் தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி செய்யலாம் எப்படித் தெரியுமா?
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
இஞ்சி எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் (நறுக்கியது) - 2
பூண்டு - 3
பச்சை மிளகாய் - 2
உப்பு - ½ தேக்கரண்டி
பெருங்காய தூள்- ஒரு சிட்டிகை
பொட்டு கடலை - ⅓ கோப்பை
தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு விதைகள் - ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 தளிர்கள்
காய்ந்த மிளகாய் - 2
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ½ கப்
செய்முறை
முதலில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், என்பவற்றை பொடியா நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொண்ட பொருட்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் மிக்சியில் தண்ணீர் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து எடுத்துக் கொண்ட சட்னி கலவையை கலந்து கிளறி எடுத்தால் தேங்காய் இல்லாமல் சட்னி தயாராகி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |