காலை வெறும் வயிற்றில் எந்த பழங்களை சாப்பிடலாம்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டுமானால் காலை உணவு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
காலை உணவாக எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மிகுந்த அக்கறை செலுத்தப்படவேண்டும்.
காலை உணவு நமது ஆராக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே காலை உணவாக அதிக புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் உதாரணமாக முட்டை அவித்த பயறு அல்லது கடலை போன்ற உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது சிறந்தது.
இருப்பினும் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் பல நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. சில வகையான பழங்களை காலையில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
காலையில் சாப்பிட வேண்டிய பழங்கள்
தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இந்த பழத்தில் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. காலையில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான திரவம் கிடைக்கும்.
பப்பாளியை காலையில் சாப்பிட வேண்டும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. வயிற்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ஆப்பிள் பழத்தை காலையில் சாப்பிடலாம். நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிறைந்தது. காலையில் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது.
கிவி பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இந்த பழங்களால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். செரிமானத்தை மேம்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |