குளிர்காலத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
குளிர்காலங்களில் எந்தெந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குளிர் காலங்களில் நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் தேவை. ஏனெனில் குளிருக்கு சூடான உணவுகளை தான் நமது உடல் விரும்புகின்றது.
ஆதலால் அடிக்கடி எண்ணெய்யில் பொரித்த உணவுகளையே மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது குளிர்காலங்களில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

தவிர்க்க வேண்டியது என்ன?
குளிர்காலங்களில் எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பஜ்ஜி, போண்டா இவற்றினை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேலும் குளிர்ந்த உணவுகளை குளிர்காலத்தில் தவிர்ப்பது மிகவும் நல்லது. ப்ரிட்ஜில் எடுத்து அப்படியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அதே போன்று குளிர் பானங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடலில் ஜீரண சக்தி பலவீனமடைகின்றது.
உடலில் உள்ள ஈரப்பதத்தினை குறைக்கும் உணவுகளான பரோட்டா, சப்பாத்தி, காய்கறி சாலட் போன்ற உலர்ந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் வாதம் ஏற்படும்.

எந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்?
குளிர் காலங்களில் புதிதாக சமைத்த சூடான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சூப் அடிக்கடி எடுத்துக் கொள்ளவும் இவை உடலுக்கு வெப்பத்தினைக் கொடுத்து குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்கின்றது.
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்காமல் நல்ல கொழுப்பு உணவான நெய் இவற்றினை சேர்த்துக் கொள்ளவும். நெய் உடம்பிற்கு தேவையான சக்தியை கொடுப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது.
குளிர்காலத்தில் ஏற்படும் வாதத்தினை தடுப்பதற்கு நெய் எடுத்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதம் மற்றும் நீர்ச்சத்து அதிகமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலை சமநிலையில் பாதுகாக்க முடியும்.
