கறையான வடிகட்டியை இனிமே வீசாதீங்க - இப்படி கிளீன் பண்ணுணா புதிது போல மாறும்
டீ வடிகட்டியில் அடிக்கடி அதை பயன்படுத்துவதன் காரணமாக கறை படிந்து போய் இருக்கும். இதை சிலர் அப்படியே வீசி விடுவார்கள். ஆனால் அதை வீட்டிலேயே புதிது போல மாற்ற முடியும்.
டீ வடிகட்டி
தினமும் டீ போடும் போது அதை வடிப்போம். இவ்வாறு வடிப்பதன் காரணமாக வடிகட்டியில் கறை படிய நேரிடும். இது நாளடைவில் வடிகட்டியின் துளைகளை அடைத்து விடும்.
இதற்காக சிலர் வடிகட்டியை வீசி விட்டு புதிய வடிகட்டியை வாங்குவார்கள். ஆனால் இப்படி புது வடிகட்டி வாங்க வேண்டிய அவசியமில்லை.
இந்த பழைய வடிகட்டியை புதிது போல மாற்றுவது கடினமும் இல்லை. இதற்கு சில வழிகளே உள்ளது. அதை வரிவாக கீழே பார்க்கலாம்.

வழிமுறைகள்
கறை படிந்ந வடிகட்டியை பார்க்கும் போது நமக்கே மிகவும் அருவருப்பாக இருக்கும். இந்த கறைகளை போக வைப்பது மிகவும் கடினமாக இருக்கும். சோப்பு, ஸ்க்ரப்பர்கள் போட்டாலும் பயன் இல்லை.
ஆனால் சில வீட்டு வைத்தியம் மூலம் வடிகட்டியை புதிது போல மாற்றலாம்.
பேக்கிங் சோடா, வினிகர் சிறந்த தீர்வு. கொதிக்கும் நீரில் வினிகர், பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் திரவம் சேர்த்து, அதில் வடிகட்டியை சில நிமிடங்கள் ஊறவைத்தல் வேண்டும். இவ்வாறு செய்யும் போது கறை இழகும்.

சிறிது நேரம் கழித்து, வடிகட்டியை எடுத்து பழைய டூத் பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்கவும். இப்படி செய்யும் போது பழைய டீத்தூள் எளிதில் வெளியேறி, அடைபட்ட துளைகள் திறக்கும்.
வடிகட்டி ஸ்டீலால் செய்யப்பட்டிருந்தால், அதை சில நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கவும். ஆறிய பிறகு, ஸ்க்ரப்பர் கொண்டு சுத்தம் செய்தால், படிந்த அழுக்கு நீங்கி மீண்டும் புதிது போல் மாறும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |