குளிர்காலத்தில் துளசி செடியை எப்படி பராமரிப்பது? இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது
குளிர் காலத்தில் துளசி செடிகள் காய்ந்து போகாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
துளசி
இந்து மத சாஸ்திரப்படி துளசி செடிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஆயுர்வேதத்திலும் துளசி ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகவும் கருந்தப்படுகிறது.
துளசி செடியை கவனமாக வீட்டில் வளர்த்து வந்தாலும் கால நிலை மாற்றத்தினால் வாடி அழுக ஆரம்பித்துவிடும்.
குறிப்பாக, கோடை மற்றும் குளிர்காலங்களில் செடி வறண்டு போகக்கூடும். அந்த வகையில், குளிர்காலத்தில் இதனை எவ்வாறு பராமரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
எவ்வாறு பராமரிப்பது?
குளிர் காலத்தில் துளசி செடிக்கு சூரியஒளி மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆதலால் சூரிய ஒளி படுமாறு மாற்றி வைக்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணி நேரமாவது செடியை சூரிய ஒளியில் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
அதிக பனி மற்றும் குளிர் காலங்களில் இலைகள் வாடி செடி அழுகிவிடும். இவ்வாறான நேரத்தில் இரவில் வீட்டிற்குள் தூக்கி வைத்துக் கொள்ளவும்.
குளிர் காலத்தில் அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. அவ்வாறு ஊற்றினால் வேர்கள் அழுகிவிடும். குளிர் காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் மண் காய்ந்து போகாமலே இருக்கும். இரு தினங்களுக்கு ஒருமுறை ஊற்றிக்கொள்ளவும்.
குளிர்காலத்தில் துளசி செடியின் மண்ணை மாற்றி புதிய மண் கலந்து விட வேண்டும். ஏனெனில் பழைய மண்ணாமல் செடிக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் தர இயலாது... செடியும் காய்ந்து போய்விடும்.
தேவையற்ற களை செடிகள் முளைக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். களைகளை நீக்குவதால் செடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைத்து செழிப்பாக வளரும்.
இலைகளை பறிக்கக்கூடாது?
சிலர் மத மற்றும் மருந்திற்காக துளசி இலைகளை தினசரி பறிப்பதுண்டு. குளிர்காலத்தில் அதிக இலைகளை பறிப்பதால் செடி காய்ந்து கருகத் தொடங்கிவிடும். ஆதலால் குறைவான இலைகளை குளிர்காலத்தில் பறிக்கவும்.
துளசி செடி நட்டு வைத்துள்ள மண்ணில் காய்ந்த இலைகள் மற்றும் பூக்களை சேர்ப்பதால் மண் வெப்பமாக இருக்கும். செடியும் பாதுகாப்பாக இருக்கும்.
இரவு நேரங்களில், துளசி செடியின் இலைகள் மற்றும் தண்டுகளை துணியால் மூடுவதால் பனியினால் ஏற்படும் தாக்கத்திலுருந்து செடியை பாதுகாக்கலாம்.
15 நாட்களுக்கு ஒரு முறை மண்ணில் வேப்பம் பொடியை கலந்து விடுவது, செடியை அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |