இரவு சாப்பிடாமல் தூங்கும் பழக்கம் இருக்கா? அப்போ “இந்த” நோய் வரலாம்- ஜாக்கிரதை
பொதுவாக அதிக எடை பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் காலை உணவை தவிர்த்து மற்ற இரண்டு வேளைகள் மட்டும் சாப்பிடுவார்கள்.
அதே சமயம், இன்னும் சிலர் இரவு வேளைகளில் உணவு சாப்பிடாமல் காலை மற்றும் மதியம் மாத்திரம் உணவு சாப்பிடுவார்கள். இப்படி உணவை ஒரு வேளை மாத்திரம் தவிர்ப்பது நல்லதா, கெட்டதா என்பதும் விடை தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது.
இரவு வேளை உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என பலராலும் பேசப்பட்டாலும் இரவு வேளையில் உணவை குறைத்தால் உடல் எடை குறையும் என்பது மருத்துவ ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் எனக் கூறப்படுகின்றது.
இரவு உணவை தவிர்க்கும் நபருக்கு தூக்கம் பிரச்சினை, ரத்தத்தில் ஏற்ற இறக்கங்கள், மனப்பதற்றம் அதிகரிப்பு, மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் நிறுத்தாமல் இது நள்ளிரவில் உணவு தேடலையும் அதிகப்படுத்தும்.
முறையற்ற உணவுப்பழக்கத்தின் காரணமாக, அசிடிட்டி, அல்சர் மற்றும் குடல் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மறுநாள் கண்விழித்து பார்க்கும் பொழுது புத்துணர்வு இல்லாத ஒரு நிலையும் ஏற்படும்.
அந்த வகையில், இரவு வேளை சாப்பாட்டை வேண்டாம் என ஒதுக்கலாமா? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
இரவில் கட்டாயம் உணவு அவசியம்
1. இரவு வேளைகளில் உணவு சாப்பிடாமல் இருக்க நினைப்பவர்கள் பால் அல்லது தானியக் கஞ்சி குடிக்கலாம். ஏனெனின் வெறும் வயிற்றில் தூங்கும் பொழுது வயிற்றில் சில கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. டயட்டில் இருப்பவர்கள் இரவு வேளைகளில் பிரெட் டோஸ்ட் மற்றும் ஆம்லெட் சாப்பிடலாம். பருப்பு ரசம் சேர்த்த குழைவான சாதம் சாப்பிடலாம். இது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். அளவாக சாப்பிடும் ஒருவருக்கும் எவ்வித பிரச்சினையும் இருக்காது.
3. பணிநேர பிரச்சினையால் அமர்ந்து சாப்பிடும் ஒருவருக்கு வேகமாக சாப்பிடக் கூடிய உணவுகளை வாங்கி சாப்பிடலாம். இது விரைவாக செரிமானத்திற்குள்ளாகி விடும். எனவே எடை அதிகரிப்பு கவலை வேண்டாம்.
4. நபர் ஒருவர் இரவு வேளையில் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அந்த உணவு சிறந்த முறையில் செரிமானத்திற்குள்ளாக வேண்டும் என்றால் இரவு உணவை 7 முதல் 8 மணிக்கு முன்னரே சாப்பிட்டு விடுங்கள். இதுவே சிறந்த உணவு பழக்கமாகும்.
5. அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு சேர்த்த உணவுகளை இரவு வேளைகளில் சாப்பிட வேண்டாம். ஏனெனின் இது கொலஸ்ரோல் போன்ற மோசமான பிரச்சினைகளை கொண்டு வரும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்து விட்டால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |