ரயிலுக்கு முன்னாள் ஓடிய யானை: நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ! வைரலாகும் வீடியோ காட்சி
இணையத்தில் அவ்வப்போது சில காணொளி வைரலாகி வருவது வழக்கம் தான். ஒரு சில காணொளிகள் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும், ஆனால் சில காணொளிகள் நம்மை கண்ணீர் சிந்த வைக்கும்.
அவ்வாறான காணொளி ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகின்றது.
மரணத்தில் இருந்து மீண்ட யானை
தண்டவாளத்தில் யானை ஒன்று நின்றுக் கொண்டிருந்த போது யானையை நெருங்கி வந்துக் கொண்டிருந்த வேளையில் நொடிப்பொழுதில் யானையை காப்பாற்றிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் மக்களுக்கு ஆட்டம் காட்டி வந்த யானையை பிடித்து வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு பகுதியில் விடப்பட்டது.
இந்த யானை குறித்த வனத்தை விட்டு வெளியேறி அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் நின்றது. அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரயில் தண்டவாளத்தில் ரயில் ஒன்று யானையை நெருங்கிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இதனைப் பார்த்த வனத்துறையினர் நொடிப்பொழுதில் யானையை தண்டவாளத்தில் இருந்து விரட்டினார். அப்போது யானை உடனடியாக தண்டவாளத்தை விட்டு இறங்கி வேகமாக சென்றது.
பிறகு யானை ரயில் தண்டவாளத்தில் கடந்து சென்றது. இவ்வாறு நொடிப்பொழுதியில் யானையை காப்பாற்றிய வனத்துறையினருக்கு அதிக பாராட்டுக்கள் குவிந்து இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.