உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி!
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர் அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் சிலர் மிக குறைவாக சாப்பிடுவது, தினமும் மூன்று வேளைக்கு பதிலாக 2 அல்லது ஒரு வேளை உணவு சாப்பிடுவது, என பல்வேறு எடைஇழப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் எவ்வித உடற்பயிற்சியும் இல்லாமல் இந்த உணவு மூலம் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம்.
அது தான் ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி. இந்த ரொட்டியை எவ்வாறு செய்வதென்றுப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் - ஒரு கப்
- கேழ்வரகு மாவு - ஒரு கப்
- மிளகாய்த் தூள் - 1/4 மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 1
- கேரட் துருவல் - 2 மேசைக்கரண்டி
- தேங்காய் துருவல் -1 மேசைக்கரண்டி
- பொட்டுக் கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- தயிர் - 1 மேசைக்கரண்டி
- நெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்னர் அதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, தயிர் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு கெட்டியாக பிசையவும்.
கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன் மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி சூடானதும் ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
இப்போது சூப்பரான, சுவையான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி ரெடி.