சாணக்கிய நீதி - கணவன் முன்னாடி மனைவி இந்த விஷயங்களை செய்ய கூடாதாம்
கணவன் மனைவி நீண்ட காலம் மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் மனைவிகள் குறிப்பிட்ட சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியம்.

சாணக்கியர் நமது வாழ்க்கைக்கு எது வேண்டும் எது வேணடாம் என பல விடயங்களை அவர் தனது நுலில் குறிப்பிட்டுள்ளார்.அந்த வகையில் கல்யாண வாழ்க்கையில் தம்பதிகள் ஒன்றாக பல ஆண்டுகள் ஒன்றாக சந்தோஷமாக வாழ்வதற்கு மனைவிகள் சில விடயங்களை செய்ய வேண்டும். தற்போது உள்ள தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவேதே இல்லை. சிறு சிறு விஷயங்களுக்கு கூட சண்டை போட்டு பிரிந்து விடுகிறார்கள். அப்படி இருக்க தற்போது சாணக்கியர் மனைவிகள் கணவன் முன்னிலையில் சில விஷயங்களை செய்ய கூடாது என்று கூறுகிறார்.

மனைவிகள் செய்யக்கூடாதது
சாணக்கியர் கருத்துப்படி, கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டு அவர்களை அடிக்கடி புகழ்வது உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என கூறுகிறார். குறிப்பாக, கணவர் முன்னிலையில் டற்ற ஆண்களை புகழ்வது அவரை சங்கடப்படுத்தக்கூடும். அதேபோல், கோபத்தில் காயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசாமல், நிதானமாகப் பேசுவது தம்பதியரின் நல்லுறவைப் பேண உதவும் எனப்படுகின்றது.

சாணக்கியர் கருத்துப்படி, மனைவி எப்போதும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பது குடும்ப உறவுக்கு நல்லது எனக் கூறப்படுகிறது. கணவர் முன்னிலும் அலட்சியமான தோற்றத்தில் இருக்காமல், தன்னைப் பராமரித்துக்கொள்வது முக்கியம் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார். அதாவது வெளியில் செல்லும் போது மட்டும் தங்களை அழகுபடுத்தாமல் கணவன் முன்னிலையில் வீட்டிலும் அழகாக இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

சாணக்கியர் கருத்துப்படி, கணவரை பணம், அழகு அல்லது அந்தஸ்து போன்ற விஷயங்களில் மற்றவர்களுடன் ஒப்பிடுவது தம்பதியரிடையே மனக்கசப்பை ஏற்படுத்தலாம் என சாணக்கியர் விளக்கி உள்ளார். மேலும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, இருப்பதில் திருப்தியுடன் வாழ்வது குடும்ப மகிழ்ச்சிக்கு உதவும் என சாணக்கிய நீதி கூறுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).