வெளியில் சாப்பிட சென்ற மனைவி... கணவரின் ஆக்ஸிஜனை எடுத்த மருத்துவர்! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென மரணித்ததால், மனைவி மருத்துவர் ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்து இவ்வாறு ஆகிவிட்டதாக மனைவி குற்றம்சாட்டி கதறி அழுதுள்ளார்.
இந்திய மாநிலமான தமிழகத்திலும் கொரோனா அதிகரிக்கும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 800 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டும், 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், திட்டக்குடி பகுதியினை சேர்ந்த ராஜா என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆக்ஸிஜன் வசதியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது மனைவி கயல்விழி உடனிருந்து கவனித்துக் கொண்டுள்ளார்.
நேற்று காலை 10 மணியளவில் கயல்விழி சாப்பிடுவதற்கு வெளியே சென்ற நிலையில், மருத்துவர்கள் ராஜாவின் ஆக்ஸிஜனை எடுத்துவிட்டதாகவும், தனது கணவர் உயிரிழந்ததாகவும், கணவரின் இறப்பிற்கு மருத்துவர் தான் காரணம் என்று கதறியுள்ளார்.
பின்னர் போலீசார் மற்றும் மருத்துவ நிர்வாக ஊழியர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்த உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின்னர்தான் தங்கள் பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்து செல்வோம் என கூறியுள்ளனர்.
ஆனால் கயல்விழி இறந்த கணவரின் உடலை கட்டி பிடித்தபடி உடலை தரமாட்டேன் என கூறியதால் சடலம் 2 மணிநேரத்திற்கு மேல் அவசர சிகிச்சை பிரிவிலேயே இருந்தது. பின்னர் கயல்விழியை சமாதானப்படுத்தி உடலை உடற்கூறு ஆய்வு செய்ய கொண்டு சென்றுள்ளனர்.
