கணவரை வெறுத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்: அட்லீயின் மனைவி கொடுத்த பதிலடி
முன்னணி இயக்குனராக வலம்வரும் அட்லீ நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்ட நிலையில், அவரது மனைவி பிரியா தக்கபதிலடி கொடுத்துள்ளார்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இதுவரை வெளியான, 'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', மற்றும் 'பிகில்' ஆகிய படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும் சில காட்சிகளை காப்பியடித்து விட்டதாக சர்ச்சையிலும் சிக்கி வருகின்றார்.
இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும், அட்லீ மனைவி பிரியா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் அட்லீ வெறுப்பாளர்களுக்கு என்ன சொல்ல நிலைகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணமாக, பிரியா பதில் கொடுத்துள்ளார். அதாவது, "எங்கள் மீதும் அதிக அன்பை பொழிவதற்கு நன்றி... அன்பை பரப்புவோம் என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அட்லீ மற்றும் பிரியா இருவரும் வெறுப்பை காட்டினாலும் அன்பை கொடுப்பதற்கு தயாராக இருப்பவர்கள் என்பது தெரிகிறது. மேலும் இவரது இந்த அணுகு முறையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.