கடற்கரையில் திடீரென காணாமல் போன மனைவி! 1 கோடி கொடுத்த தேடியவருக்கு நடந்த பேரதிர்ச்சி
கணவருடன் கடற்கரைக்கு வந்த மனைவி திடீரென காணாமல் போன நிலையில், கணவர் 1 கோடி செலவழித்து இறுதியில் ஏமாந்து போய் நின்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியுடன் கடற்கரை வந்த இளைஞர்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் சாய் பிரியா என்ற பெண்ணிற்கும் உறவுக்காரரான சீனிவாஸ் என்பவருக்கும் ஒரு வருடம் முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் ஐதராபாத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
சீனிவாஸ் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மனைவி கம்யூட்டர் வகுப்பு செல்வதற்கு பிடிவாதமாக கேட்ட நிலையில், வகுப்பிற்காக விசாக பட்டினம் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள கடற்கரைக்கு சென்று திருமண நாளை கொண்டாடியுள்ளனர். கணவர் போன் பேசிக்கொண்டிருந்த திடீரென மாயமாகியுள்ளார்.

1 கோடி செலவில் தீவிர தேடிதல்
மனைவியைக் காணாமல் பதறிய கணவர், ஒருவேளை கடலில் அலை இழுத்துக் கொண்டு போயிருக்குமோ என பயந்து கடற்படை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.
மறுநாள் காலையில் படகுகள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் மனைவி கடலுக்குள் இழுந்துச்சென்ற எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளது.
பின்பு இரு தினங்கள் கழித்து பிரியா நெல்லூரில் தனது காதலனுடன் இருப்பது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு பிரியா ரவி என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
திருமணம் முடிந்தும் குறிதத காதலை தொடர்ந்துள்ள நிலையில், சம்பவத்தன்று காதலனுடன் எஸ்கேப் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரியாவை தேட கடற்படை நிர்வாகம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், பல அரசு துறைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மனைவி அலையில் சிக்கி உயிரிழந்திருப்பாளோ என்ற அச்சத்தில் கோடி கணக்கில் தேடுதல் வேட்டை நடத்திய கணவனுக்கு அதிர்ச்சி அளிக்கும் உண்மை கிடைத்துள்ளது.
