இறுதி சடங்கில் நடனமாடிய ரோபோ சங்கர் மனைவி - வைரலாகும் காணொளி
நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். இன்று அவரை அடக்கம் செய்யும் போது அவரது மனைவி நடனமாடிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
ரோபோ சங்கர் மனைவி
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மதுரை சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடுவதில் பிரபலம் ஆனார். இந்த காரணத்தினால் தான் இவர் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார் என தகவல் வெளியாகி இருந்தது.
ஆனாலும் அதிக குடிப்பழக்கம் காரணமாக உடலில் அனைத்து உறுப்புக்களும் செயலிழந்து நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடனமாடிய மனைவி
ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இன்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது இவரது மனைவி பிரியங்கா ரோபோ சக்கர் சடலத்தின் முன் நின்று குத்தாட்டம் போட்டு வழி அனுப்பி வைத்தது மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
இணையவாசிகள் சிலர் இது கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் இருக்கின்றது என கருத்து தெரிவித்து இருந்தனர். சிலர் அதரவாக பேசி இருந்தனர்.
மேலும் விபரங்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |