கழிப்பறையில் 10 நிமிடங்களுக்கு மேல் செலவிட வேண்டாம்! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்
பொதுவாகவே நமது உடல் ஆரோக்கியத்தில், குடல் ஆரோக்கியமானது முக்கிய பங்கு வகிக்கின்றது. அது கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநோய் வரை அனைத்துடனும் சம்பந்தப்பட்டது என்று ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.
எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்கள் குடல் அமைப்பை சிறப்பாக செயல்பட வைக்கவும் நடைமுறை குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மருத்துவரின் ஆலோசனை
கழிப்பறையில் அதிக நேரம் செலவிடாதீர்கள் என அறிவுறுத்ததும் அவர், 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் அமர்ந்திருப்பதால் மூல நோய் அபாயத்தை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் பிரகாரம் 20 பெரியவர்களில் 1 நபருக்கும் மூல நோய் ஏற்படுகிறது. போதுமான அளவு நார்ச்சத்து இல்லாத பட்சத்தில் இந்நிலை ஏற்படுகின்றது.
ஆரோக்கியமான குடல் பழக்கம் வாரத்திற்கு மூன்று முறை முதல் ஒரு நாளைக்கு மூன்று முறை வரை மலம் கழிப்பதாக இருக்கலாம். அது சாதாரணமானது தான் என குறிப்பிடுகின்றார்.
இபுப்ரோஃபென், நாப்ராக்ஸன் அல்லது ஆஸ்பிரின் போன்ற NSAID களை அடிக்கடி பயன்படுத்துவது இரைப்பை குடல் இரத்தப்போக்கு அபாயத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும் மற்றும் குடல் புறணியை சேதப்படுத்தும். உங்களுக்கு அவை அடிக்கடி தேவைப்பட்டால், பாதுகாப்பான மாற்று வழிகளைப் என்ன என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையவை. அவற்றை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்பதுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
பைபர் நிறைந்த, மாறுபட்ட உணவை உண்ணுங்கள் சராசரி அமெரிக்கர் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராம் நார்ச்சத்தை உட்கொள்கிறார், இது பரிந்துரைக்கப்பட்ட 25–38 கிராமை விட மிகக் குறைவு.
துர்நாற்றம் வீசும் வாயு வெளியேற்றத்தை தடுக்க பெப்டோ உதவும். பிஸ்மத் சப்சாலிசிலேட் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் சல்பைட் வாயுக்களில் 95% க்கும் அதிகமானவற்றை நடுநிலையாக்க முடியும் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவும். ஆனால் குறுகிய கால நிவாரணத்திற்கு மட்டுமே இது பயன்படுத்தவும்.
வெறும் 1-2 தேக்கரண்டி சியா, ஆளி விதை அல்லது துளசி விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக்குகளை வழங்குகின்றன, அவை ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஆதரிக்கின்றன, வீக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் சீரான செரிமானத்தை வழங்குகின்றன. என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நடைமுறைகளை கடைப்பிப்பமு குடல் ஆரோக்கியத்தையும் மலச்சிக்கலையும் நிர்வகிக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |