கண்களை மட்டும் தவறியும் தேய்க்க கூடாது... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே நமது உடலின் ஒவ்வொரு பாகமும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக காணப்படுகின்றது. இதில் இந்த உறுப்பு தான் அதிக முக்கியத்துவம் கொண்டது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாடிது.
நமது உடல் பாகங்களின் ஏதாவது பாதிப்பு ஏற்படும் போது தான் உண்மையிலேயே அதன் அருமையும் மதிப்பையும் நம்மால் உணர முடிகின்றது.
சில நேரங்களில் நம்மை அறியாமலேயே நாம் நமது கண்களை அடிக்கடி தேய்க்கின்றோம். ஆனால் அது முற்றிலும் தவறு என்றும் அதனை தவறியும் செய்யக்கூடாது என்றும் மருத்துவத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏன் கண்களை தேய்க்க கூடாது?
காரணம் கண்களை கசக்கும் போது கைகளில் உள்ள கிருமிகள் விரைவாக கண்களில் பரவி கண்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்க் கூடும். ஏனைய பாகங்களை விடவும் கண்களின் மூலம் நோய் கிருமிகள் பரவும் வேகம் மிகவும் அதிகம்.
இது பார்ப்பதற்கு சாதாரண விடயமாக தோன்றினாலும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.
நோய்வாய்ப்பட்டவர்கள் இருமல் அல்லது பேசும்போது, அவர்கள் வாயில் இருந்து மற்றொரு நபரின் முகத்தில் வைரஸ் துளிகளை வெளியிடலாம்.
உங்கள் வாய் அல்லது மூக்கில் உள்ள சளி சவ்வுகள் வழியாக இந்த நீர்த்துளிகளை நீங்கள் உள்ளிழுக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
குறிப்பாக கான்ஜுன்டிவா, மெல்லிய, வெளிப்படையான திசுக்களின் அடுக்கு, இது உள் கண்ணிமை மற்றும் கண்ணின் வெள்ளைப் பகுதியை உள்ளடக்கியது. கண்களை அடிக்கடி தேய்க்கும் போது உங்கள் கண்களைப் பாதுகாக்கும் சவ்வுகள் வழியாகவும் நோய்கிருமிகள் உடலுக்குள் செல்ல வாய்ப்பு காணப்படுகின்றது.
மேலும், யாரேனும் பாதிக்கப்பட்ட கண்ணைத் தேய்த்துவிட்டு, பிறரைத் தொட்டால் வைரஸ்கள் மற்றும் தொற்றுகள் பரவும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
எனவே சுத்தமற்ற கைகளால் அடிக்கடி கண்களை தொடுவதை முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக தவறியும் கண்களை தேய்ப்பது மற்றும் கசக்குவது போன்றவற்றை தவறியும் செய்யவே கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |