தினமும் பெண்கள் ஏன் உடற்பயிற்சி அவசியம்- மருத்துவர் விளக்கம்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கிறது.
தினமும் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
வேலைகள் மற்றும் குடும்பம் என பல்வேறுப்பட்ட காரணங்களால் பெண்கள் அவர்களின் உடல்நிலை குறித்து பெரிதாக கவனம் எடுப்பது குறைந்து வருகிறது.
இன்றைய சமூகத்தினருடன் போராடும் பெண்கள் அவர்களின் உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பது குறித்து மருத்துவர் ஒருவர் பேசியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதில் அப்படி என்னென்ன விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
மருத்துவர் விளக்கம்
பொதுவாக பெண்கள் இரண்டு விதமாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய அழகு, உடல் ஆரோக்கியம், இலட்சியம் ஆகியவற்றில் ஈடுபாடுடன் இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின்னர் குடும்பம், கணவர், குழந்தை என வாழ ஆரம்பித்து விடுவார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் அவர்களில் சமூகத்தினருடன் பழகும் வாய்ப்பு குறைந்து விடுகிறது.
இது போன்று அல்லாமல் பெண்கள் திருமணத்திற்கு பின்னர் தான் நிறைய விடயங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பம், குடும்ப பொறுப்புகள் மற்றும் பிரச்சனைகள், குழந்தை வளர்ப்பு, அலுவலக வேலைப்பளு ஆகியவற்றுடன் போராட வேண்டும். இது அவர்களுக்கு மன ரீதியிலான பிரச்சினைகளை கொடுத்தாலும் உடல் ஆரோக்கியம் குறித்து யோசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்
1. பெண்கள் தினமும் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்து வந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
2. உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதனால் அவர்களின் உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்கோப்புடன் இருக்கும்.
3. சிலருக்கு திருமணத்திற்கு பின்னர் ஹார்மோன்கள் சீராக இயங்காமல் மாதவிடாய் கோளாறு மற்றும் உடல் நிலை கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சி செய்து வந்தால் இவை அனைத்தும் சீராக இயங்கும்.
4. குடும்ப வேலைப்பளு காரணமாக மனநிலையில் மாற்றம் இருக்கும். தினமும் உடற்பயிற்சி செய்யும் பெண்ணுக்கு மனம் எப்போதும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.
5. ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |