பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏன் ஓய்வு அவசியம் ? காட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
முன்னைய காலங்களில் பெண்கள் பிரசவத்துக்கு பின்னர் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காகவே வளைகாப்பு, சீமந்தம் என்று அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். பிரசவத்துக்குப் பிறகு குறைந்தது 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் சொன்னதற்கு பின்னால் நிறைய அறிவியல் காரணங்கள் மறைந்துள்ளது.
ஆனால், தற்காலத்தில் அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் குழந்தை பெற்ற இரண்டு மூன்று நாட்களுக்குள் பெண்கள் வேலைக்கு திரும்பிவிடும் அவல நிலை காணப்படுகின்றது.
கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக இயக்கம், சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப் போகும். பிரசவத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு குறைந்தபட்சம் 3 தொடக்கம் 6 மாதங்களாவது தேவைப்படும் என்பதே அறிவியல் ரீதியான உண்மை.
பிரசவத்திற்கு பின் ஏற்படும் பிரச்சினைகள்
அப்படி கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அந்தப் பெண்ணால், குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுக்க முடியும்.அப்போதுதான் தாய்பாலின் முழுமையான பலனை குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
குழந்தை பிறந்தவுடன் சில காலம் வரையில் பெண்களுக்கு தூக்கம் ஒரு பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கும். இதை சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி ஓய்வெடுப்பது ஒன்றுதான். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர் நோக்கும் சில துன்பங்களை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது.
பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே குடும்ப சூழ்நிலையால் மன அழுத்தத்தில் இருந்த பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளுஸ்’ என்கிற மனநல சிக்கல் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
ஓய்வு தேவை என்பதை உணருங்கள்
தான் பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது, அந்தக் குழந்தையே தன்னுடையதில்லை என்பது, தாய்ப்பால் தர மறுப்பது, சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி என இது பல பெரிய பிரச்சினைகளை இது ஏற்படுத்தும்.
குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும். எல்லோரிடமும் வன்முறையாக நடந்துகொள்வார்கள். சிலருக்குப் பிரச்சினை முற்றி, குழந்தையையே கொலை செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பிரசவித்த பெண்ணிடம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவது மிகவும் அவசியம். இவ்வாறான பிரச்சினைகளை தவிர்த்து பெண்கள் சீராண ஆரோக்கியத்துடன் இருந்தால் மாத்திரமே அவர்களால் குழந்தையை ஆரோக்கியமாக வளக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |