ஒரே வீடியோவால் டிரெண்டான 81 வயதான பாட்டி! மிரளவைக்கும் ஆங்கில மொழி பேச்சு
சென்னையில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்த மியான்மரின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஆங்கிலம் கற்பிக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மியான்மரில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றிய மெர்லின் எனும் 81 வயது பாட்டி, திருமணத்துக்கு பின் இந்தியா வந்துள்ளார்.
இவரின் கணவரின் இறப்புக்கு பின்னர் உறவினர்களால் தனித்து விடப்பட்ட நிலையில், சென்னையில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், முகமது ஆஷிக்(21) என்ற வாலிபர் , மெர்லினை சந்தித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரல்
அப்போது அவரின் ஆங்கிலம் பேசும் திறமையை பார்த்து ஆச்சரியமைடைந்த இவர் மெர்லினுக்கு உதவி செய்யும் நோக்கில் ஆங்கிலம் கற்பிக்கும் வீடியோக்களை உருவாக்க உதவுமாறு கேட்டுள்ளார்.
இதற்காக பணம் தருவதாகவும் உறுதியளித்தார் ஆஷிக்.
இதற்கமைய தற்போது இன்ஸ்டாகிராம் முலம் ஆஷிக், மெர்லின் ஆங்கிலப்பயிற்சி வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. @englishwithmerlin என்ற இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை மாணவர்கள் பலர் தொடர ஆரம்பித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |