டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது ஏன்? இது தெரிஞ்சா இனி பண்ண மாட்டீங்க
பொதுவாகவே அனைவரும் புதிய வாகனம் வாங்கினால் கோவிலுக்கு கொண்டு செல்வதும் பூஜை முடித்து வாகனத்தின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து வாகன சக்கரத்தால் அதை நசித்து வாகனத்தை வெளியில் எடுத்து வேலையை ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றோம்.
இவ்வாறு வாகன சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைப்பது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? இதற்கான காரணம் என்ன இந்த வழக்கம் எதனால் பின்பற்றப்படுகின்றது என இந்த பதிவில் பார்க்கலாம்.
முற்காலத்தில் மோட்டார் வாகனங்கள் காணப்படவில்லை, மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
என்ன காரணம் தெரியுமா?
இவ்வாறு போக்குவரத்துக்கு கால்நடைகளை பயன்படுத்தும் போது அவற்றின் கால்களில் கல்லோ அல்லது முற்களோ குத்துப்பட்டால் அந்த காயங்களில் கிருமிகள் பெருகி காயம் இலகுவில் சரியாகாத நிலை காணப்பட்டது.
மேலும் குதிரைகள் மற்றும் மாடுகள் சேறு, சகதி ஆகியவற்றில் பயணிக்க வேண்டிய நிலை காணப்பட்டது, இதில் இருக்கும் பக்டீரியாவால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
மருத்துவ வளர்ச்சியற்ற காலத்திலேயே நமது முன்னோர்கள் எலுமிச்சை ஒரு இயற்கை என்டிபயோட்டிக் இது காயத்தில் உள்ள கிருமிகளை அழித்து காயத்தை குணப்படுத்தும் என்பதை அறிந்து காயங்களை ஆற்ற பயன்படுத்தினார்கள்.
இதற்காகவே வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மாடுகள் மற்றும் குதிரைகளை வாரம் ஒரு முறை எலுமிச்சை பழத்தை மிதிக்க வைத்தார்கள், இதனால் கண்ணுக்கு தெரியாத சிறிய காயங்கள் இருந்தால் கூட அவை எளிதில் குணமடையும்.
வண்டிகளில் பொருத்தப்பட்டள்ள மாடுகள் அல்லது குதிரைகளின் கால்கள் வலுவாக இருந்தால் தான் அவற்றை பயன்படுத்தி வேகமாக பயணம் செய்யலாம். இதற்காவே எலுமிச்சை பழத்தை மிதிக்க வைக்கும் வழக்கம் உருவாக்கப்படது.
ஆனால் தற்போது காரணமே புரியாமல் நவீன வாகனங்களின் சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து அவற்றை நசித்துக்கொண்டிருக்கின்றோம்.
அதனால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை.
இந்த வழக்கம் மாட்டு வண்டிகளுக்கும் குதிரை வண்டிகளுக்கும் உருவாக்கப்பட்டது என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |