Airplane Mode என்றால் என்ன? விமான பயணத்தின்போது ஏன் இதை செயற்படுத்தணும்னு தெரியுமா?
பொதுவாகவே தற்காலத்தில் செல்போன் இல்லாத வாழ்க்கையை நம்மில் பலரால் கற்பனை கூட செய்ய முடியாது.
அந்தளவிற்கு செல்போன் நம் வாழ்வில் ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது என்பதே உண்மை.
இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பாகுபாடு இன்றி அடிமையாகியுள்ள ஒரு விடயம் செல்போன் தான் என்றால் மிகையாகாது.
பொதுவாகவே விமானத்தில் பயணம் செய்யும்போது, போனை ஏரோபிளேன் மோடில் வைக்க வேண்டும். என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் அவ்வாறு அறிவுறுத்தப்படுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் தொடர்பில் பலருக்கும் தெரியாது. அது குறித்த முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
ஏர்பிளேன் மோட் அல்லது ஃபிளைட் மோட் இவ்வாறான இரு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்த மோடை ஆக்டிவேட் செய்வதனால் தற்காலிகமாக நம்முடைய செல்போனை செயலிழக்கும்.
அதாவது, தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடும். இதன் வாயிலாக சிக்னல் முழுமையாக துண்டிப்படுவதனால் எந்த அழைப்பையும் மேற்கொள்ள முடியாது.
விமான பயணிகள் தங்களின் பயணங்களின் போது ஏன் செல்போன்களை ஃபிளைட் மோடில் போட நிர்பந்திக்கப்படுகின்றார்கள் என்றால் விமானம் பறக்கும்போது செல்போனை சிக்கலுடன் பயன்படுத்தினால், விமானத்தின் சிக்னல் அமைப்பில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
இதனால் விமானிகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே தான் ஏரோபிளேன் மோடு கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது.
விமான பயணங்களின் போது மட்டுமன்றி அவசர காலங்களில் ஃபோனின் பேட்டரியைச் சேமிக்க விரும்பினால், இந்த ஏரோபிளேன் மோடு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. அதனை செயற்படுத்துவதன் மூலம் சிக்னல் அனைத்தும் துண்டிக்கப்படுவதால் பேட்டரி அதிகளவில் சேமிக்கப்படுகின்றது.
ஃபோனின் பேட்டரியைச் சேமிக்க வேண்டும் என்ற சந்தர்ப்பத்தில் இது மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும். மேலும் மொபைல் சிக்னல் சரியாக கிடைக்காத போது சிறிது நேரம் ஏரோபிளேன் மோடில் வைத்து மீண்டும் பயன்படுத்தும் போது சிக்னல் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது.
அதுமட்டுமன்றி போனை விரைவாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றாலும் இந்த ஏரோபிளேன் மோடில் வைத்து சார்ஜ் போடுவது பயனுள்ளதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |