Medical Facts: பாத்ரூமில் ஏன் ஆண்கள் அதிக நேரம் இருக்கிறார்கள் தெரியுமா? ஆய்வின் வெளிச்சம்
பொதுவாக குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட பல அடிப்படை தேவைகளுக்காக் நாம் குளியலறையில் அதிகமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அந்த சமயத்தில் சிலர் அதிகமான நேரம் குளியலறையில் இருப்பார்கள். அதனை அவர்கள் சொர்க்கமாகவும் பார்ப்பார்கள். ஏனெனின் நமது அளவுக்கு அதிகமான உணர்ச்சிகளை காட்டும் இடம் பாத்ரூமாகவுள்ளது.
அத்துடன் சிலரின் உண்மை முகத்தை அவர்களின் பாத்ரூமில் தான் பார்க்க முடியும். இதனால் சமீபக் காலமாக பாத்ரூமில் அதிக நேரம் செலவழிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினசரி Skin care வழக்கத்தை பின்பற்றுபவர்கள் தொடக்கம் வயதான முதியவர்கள் வரை பாத்ரூமில் எந்தவித தயக்கமும் இன்றி சந்தோஷமாக அங்கு இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் பாத்ரூமில் நீங்கள் நீங்களாகவே இருக்கலாம்.
அந்த வகையில் அதிக நேரம் பாத்ரூம் பயன்படுத்தும் மனிதர்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஏன் ஆண்கள் அதிக நேரம் பாத்ரூமில் இருக்கிறார்கள்?
வில்லெராய் & போச் என்ற நிறுவனம் இதற்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில், 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பதிலளித்தவர்களில் 43% பேர் அமைதி மற்றும் நிம்மதிக்காக அவர்களின் அதிக நேரத்தை பாத்ரூமில் செலவிடுவதாக கூறியுள்ளனர்.
இதன்படி, ஒரு வாரத்தில் சராசரியாக 1 மணி நேரம் 54 நிமிடங்கள் அல்லது மாதத்தில் ஒரு வேலை நாளை பாத்ரூமில் செலவிடுகின்றனர். இது போன்று பெண்களை விட ஆண்களே அதிக நேரம் பாத்ரூமில் இருக்கிறார்கள்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை ஒரு வேலையாக செய்து வருகின்றார்கள். ஆண்கள் வாரத்திற்கு சராசரியாக 2 மணிநேரம் அல்லது கிட்டத்தட்ட 20 நிமிடங்களும், பெண்களின் ஒரு நாளைக்கு 15 நிமிடங்களுக்கு மேல் ஒரு வாரத்திற்கு 1 மணி நேரம் 54 நிமிடங்கள் பாத்ரூமில் செலவு செய்கிறார்கள்.
மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக முக்கிய இடமாக பாத்ரூம் உள்ளது. இதில் ஆரோக்கியமான நேர்மறை விளைவுகள் அதிகம் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |