அம்பானி மனைவியின் இளமையை காப்பாற்றும் பானம்- இத மட்டும் கலந்துக்கோங்க
உலக பணக்காரர்களுள் முக்கிய இடம் வகிப்பவர் தான் முகேஷ் அம்பானி மற்றும் அவரின் மனைவி நீதா அம்பானி.
போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலதிபராக நீதா அம்பானி பணியாற்றி வருகிறார். அத்துடன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
தொழில், குடும்பம், கலாச்சாரம் என அனைத்திலும் பிஸியாக இருக்கும் நீதா அம்பானி தன்னை கவரும் வகையில் தான் ஆடை அணிவார். விழா காலங்களில், சுப நிகழ்ச்சிகளில் நீதா அம்பானி அணியும் புடவைகள் தனித்துவமானவையாக இருக்கும். அவர் அணியும் ஆபரணங்களுக்கும் அதே சிறப்பு உள்ளது.
அந்த வகையில் நீதா அம்பானியின் ஆடை, அலங்காரம் பற்றிய ரகசியங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கின்னஸ் சாதனை படைத்த புடவை
நீதா அம்பானி அணியும் புடவைகள் பெரும்பாலும் 40 லட்சம் மதிப்பிலான புடவைகளாக தான் இருக்கும். இதனால் நீதா அம்பானி அணியும் புடவை “ உலகிலே விலையுர்ந்த புடவை” என கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.
குறித்த புடவையில், தங்க ஜரிகை வேலைபாடுகளால் அழகூட்டப்பட்டிருந்தது. அதனுடைய ஜாக்கெட்டில் தனித்துவமான ஓவியம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்தியாவின் மதநம்பிக்கையில் ஒன்றான சிவலிங்கம் அதில் பொறிக்கப்பட்டிருந்தாக சொல்லப்படுகின்றது. இதற்காக அவர்கள் தமிழகத்தின் புகழ் மிகுந்த காஞ்சி பட்டு, தங்க கம்பிகள் பயன்படுத்தப்பட்டன.
அந்த புடவையில், ஜொலிஜொலிக்கும் வண்ணம் எமரால்டு, ரூபி, புஷ்பராகம், முத்து போன்ற விலையுர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
அழகின் ரகசியம்
நீதா அம்பானி கோடீஸ்வரர் என்பதால் சருமத்திற்காக கோடிக்கான பணத்தை செலவு செய்வார் என பலரும் நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதை விட இவர் அழகை பராமரிக்கிறார் என்பது தான் உண்மை.
நீதா அம்பானி தன்னுடைய இளமையான தோற்றத்தை தக்க வைத்து கொள்ள தினமும் பீட்ரூட் சாறு அருந்தி வருவதாக சொல்லப்படுகின்றது. இந்த சாற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நீதா அம்பானி சருமத்தை பாதுகாக்கின்றது என அவர் நம்புகிறார்.
மேலும், நீதா குடிக்கும் பீட்ரூட்டில் அதிகமான ஈரப்பதம் உள்ளது. இது சருமத்தை நீரேற்றமாக வைத்து கொள்ளும், சாற்றில் தேன் கலந்து குடிக்கும் பொழுது முகத்திற்கு புதுபொலிவு கிடைக்கும்.
பீட்ரூட் ஜூஸில் இருக்கும் சத்துக்கள் முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்குகின்றது. தினமும் காலையில் பீட்ரூட் சாறு குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
தயார் செய்முறை
பீட்ரூட்டை தோல் நீக்கிய பின்னர் நன்றாக கழுவி விட்டு அதனை சில நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறிய பின்னர் அதனை நறுக்கி மிக்ஸி ஜாரில் உப்பு, தேன் கலந்து அரைத்து, வடிகட்டி அருந்துவதால் உடலில் பல மாற்றங்களை காணலாம். இது தான் நீதா அம்பானியின் அழகின் ரகசியமாக பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |