கோடை காலத்தில் தயிர் சாப்பிடக்கூடாதா? பலரும் அறிந்திடாத உண்மை
கால்சியம் சத்து அதிகம் கொண்ட தயிரை தினமும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தயிர்
கோடை காலத்தில் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள தயிர் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.
தயிரில் அதிகளவு ப்ரோபையாடிக்ஸ் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளன. புரதம், கால்சியம், விட்டமின் B மற்றும் உடம்பிற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.
தயிர் சாப்பிட்டால் உடம்பிற்கு குளிர்ச்சி என்று நினைக்கும் நமக்கு, தயிர் சாப்பிட்டால் முகப்பரு, தோல் அலர்ஜி, செரிமான பிரச்சினை, உடல் சூடாவது போன்ற பிரச்சினை சிலருக்கு ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் உண்மையில் உடல் சூடு அதிகமாகும் தன்மை தயிரில் உள்ளது என்பதை உட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
குறித்த ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், “கோடை காலத்தில் தயிர் சாப்பிட்டால் நம் உடலுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகின்றதாம்.
ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் வாத, பித்த, கபம் ஆகியவற்றை பொறுத்து நபருக்கு நபர் இது மாறுபடுமாம்”.
தயிர் சாப்பிட்டால் ஏன் உடல் சூடாகின்றது?
பொதுவாக புளிப்பு சுவை உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
தயிரில் கபமும் பித்தமும் அதிகமாகவும் வாதம் குறைவாகவும் இருக்கிறது. ஆகவே எந்தவொரு பருவத்திலும் தயிர் சாப்பிடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் தயிர் சாப்பிடும் போது சிலருக்கு உடல் சூட்டை அதிகரிப்பதற்கு இதுவே காரணமாகும்.
தயிரை சரியான முறையில் சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
தயிரை எப்படி சாப்பிட வேண்டும்?
கோடை காலத்தில் தயிரை தினமும் சாப்பிட்டால் உடல் சூடாகும் என்பதால், அதனை மோராக மாற்றி அருந்தலாம்.
மோரில் உப்பு, மிளவு, சீரகம் சேர்த்து பருகினால் இன்னும் உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. தயிரில் தண்ணீரை சேர்க்கும் போது, குறித்த தண்ணீர் சூட்டை குறைப்பதுடன் தயிரின் குளிர்ச்சியையும் அதிகரிக்கின்றது.
ஆகவே கோடை காலத்தில் தயிர் சாப்பிட வேண்டும் எனில் அதனை தண்ணீர் கலந்து மோராக மாற்றி பருகலாம்.
ஆனால் எந்த காரணத்தை கொண்டும் தயிரை சூடாக்க கூடாது. அவ்வாறு செய்தால் அதன் தன்மையை இழந்துவிடும். மேலும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் தயிரை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |