கோடை காலத்தில் ஏசி போட்டு தூங்குவது ஆபத்தா? தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
கோடை காலத்தில் வெயில் தாக்கத்தை சமாளிப்பதற்கு பலரும் ஏசியை பயன்படுத்திவரும் நிலையில், இது ஆபத்து என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
கொளுத்தும் வெயில்
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெயிலின் தாக்கத்தை மக்களால் சமாளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வெப்பத்தினால் அவதிப்படும் நிலையில், சற்று வசதி உள்ளவர்கள் ஏசி-யை பயன்படுத்தி சமாளித்து வருகின்றது.
ஆனால் அதிகமாக ஏசியை பயன்படுத்துவதில் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஏசி-யை பயன்படுத்தினால் ஆபத்தா?
கோடை காலத்திற்கு முன்பு ஏசியை பயன்படுத்தாமல் வைத்துவிட்டு, தற்போது அதனை சுத்தம் செய்யாமல் உபயோகப்படுத்தும் போது அதிலுள்ள தூசு, பாக்டீரியா அறை முழுவதும் பரவி மூச்சுத்திணறல் மற்றும் உடல் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏசி-யை ஆன் செய்ததும் கதவு ஜன்னல் இவற்றினை காற்று போகாமல் மூடிவைப்பது பிரச்சினை ஆகும். ஏனெனில் அறைக்காற்று வெளியே செல்ல முடியாததால் ஆக்ஸிஜன் லெவல் குறைந்து சிலருக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்படலாம்.
வெளியே அலைந்துவிட்டு வியர்வையுடன், ஏசி-யை போட்டு அமர்ந்தால், வியர்வையோடு, குளிர் சேர்ந்து சளி, இருமல், தொண்டை கரபரப்பு பிரச்சினை ஏற்படும்.
எனவே தேவையான நேரங்களில் மட்டும் ஏசியை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துக்கொள்ளவும். மேலும் தொடர்ந்து ஏசி-யை சுத்தம் செய்வது மிக முக்கியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |